1) கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியக் செயற்பாங்குத் திறன் அல்ல? a) வகைப்படுத்துதல் b) அனுமானித்தல் c) பரிசோதனை செய்தல் d) அறிக்கை தயாரித்தல் 2) குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க. a) ஆமை b) வெளவால் c) மாடு d) கோழி 3) பின்வரும் விதிமுறைகளில் எது தவறு? a) ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும். b) அறிவியல் அறையில் சத்தம் போடுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. c) குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். d) ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம். 4) அறிவியல் அறையில் செய்முறை பயிற்சியின் போது ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டது. காயங்கள் சம்பந்தமான விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும்? a) அறிவியல் ஆசிரியர் b) வகுப்பு ஆசிரியர் c) தலைமையாசிரியர் d) மாணவர் நலப்பொறுப்பாசிரியர் 5) நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி எழும்பி விரிவடைகிறது. a) கீழ் b) மேல் c) சமமாக 6) தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்? a) கரிவளி b) சிறுநீரகம் c) நீராவி d) வியர்வை 7) உடல் நலம் பாதிக்காமல் இருக்க a) கழிவுகளை அகற்ற வேண்டும். b) சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும். c) மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும். d) மழையில் நனைய வேண்டும். 8) புகைமூட்டம் மற்றும் தூசு படலத்தால் ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடுக. a) வாய்ப்புண் b) இருதய பாதிப்பு c) சிறுநீரகப் பாதிப்பு d) கண் எரிச்சல் 9) சீறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன? a) மயக்கம் b) உடல் சோர்வு c) சிறுநீரில் இரத்தம் d) நுரையீரல் பாதிப்பு 10) மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது? a) முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல் b) வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல் c) துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல் d) வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல் 11) செடிகளுக்குப் போடப்பட்ட உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். a) உற்றறிதல் b) முன் அனுமானம் c) வகைப்படுத்துதல் d) கருதுகோள் உருவாக்குதல் 12) படம்,கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன? a) இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி b) இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி c) மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி d) இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி

அறிவியல் ஆண்டு 4

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?