1) மனிதன் செய்யாத குடை மழைக்கு பிடிக்க முடியாத குடை அது என்ன? a) காளான் b) குடை c) தொப்பி 2) ஒருவனை அழைத்தால் ஊரையே கூட்டுவான் அவன் யார்? a) குருவி b) காகம் c) கிளி 3) காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? a) மெழுகுவர்த்தி b) கத்தி c) பேனா 4) மீன் பிடிக்க தெரியாது ஆனால் அழகாக வலை பின்னும் அது என்ன? a) சிலந்தி b) மீன் c) நண்டு 5) உள்ளே இருந்தால் ஓடி திரிவான் வெளியே வந்தால் விரைவில் மடிவான். அவன் யார்? a) முதலை b) மீன் c) நண்டு 6) வால் உண்டு உயிரில்லை, அங்கும் இங்கும் பறப்பான் அவன் யார்? a) பறவை b) பட்டம் c) பரசூட் 7) பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்து. அது என்ன? a) வெண்டிக்காய் b) தேங்காய் c) மாங்காய் 8) நெருப்பில் பட்டுசிவந்தவனுக்கு நீண்ட ஆயுள் அவன் யார்? a) செங்கல் b) சூரியன் c) விறகு 9) கத்தியின்றி இலைகளை வெட்டும் அது என்ன? a) கத்தி b) எறும்பு c) வெட்டுக்கிளி 10) ஒளி கொடுக்கும் விளக்கல்ல சூடு கொடுக்கும் நெருப்பல்ல அது என்ன? a) விளக்கு  b) சூரியன் c) மின்மினிபூச்சி

さんの投稿です

リーダーボード

表示スタイル

オプション

テンプレートを切り替える

自動保存: を復元しますか?