1) காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்? a) 1915 b) 1916 c) 1917 d) 1918 2) இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? a) 1825 b) 1835 c) 1845 d) 1855 3) மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க. a) வில்லியம் ஜோன்ஸ் b) சார்லஸ் வில்கின்ஸ் c) மாக்ஸ் முல்லர் d) அரவிந்த கோஷ் 4) “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர் a) பாலகங்காதர திலகர் b) தாதாபாய் நௌரோஜி c) சுபாஷ் சந்திர போஸ் d) பாரதியார் 5) பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?(அ) பாலகங்காதர திலகர் - 1. இந்தியாவின் குரல் (ஆ) தாதாபாய் நௌரோஜி - 2. மெட்ராஸ் டைம்ஸ் (இ) மெக்காலே - 3. கேசரி (ஈ) வில்லியம் டிக்பை - 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் a) 2, 4, 1, 3 b) 3, 1, 4, 2 c) 1, 3, 2, 4 d) 4, 2, 3, 1 6) பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க a) ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843 b) அடிமைமுறை ஒழிப்பு - 1859 c) சென்னைவாசிகள் சங்கம் - 1852 d) இண்டிகோ கலகம் - 1835 7) பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.(i) கிழக்கிந்தியக் கழகம் (ii) சென்னை மகாஜன சங்கம் (iii) சென்னைவாசிகள் சங்கம் (iv) இந்தியச் சங்கம் a) ii, i, iii, iv b) ii, iii, i, iv c) iii, iv, i, ii d) iii, iv, ii, i 8) இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் a) சுபாஷ் சந்திர போஸ் b) காந்தியடிகள் c) A.O. ஹியூம் d) பாலகங்காதர திலகர் 9) இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் a) சுரேந்திரநாத் பானர்ஜி b) பத்ருதீன் தியாப்ஜி c) A.O. ஹியூம் d) W.C. பானர்ஜி 10) “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர் a) பாலகங்காதர திலகர் b) M. K. காந்தி c) தாதாபாய் நௌரோஜி d) சுபாஷ் சந்திர போஸ் 11) “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்’ (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர் a) பால கங்காதர திலகர் b) கோபால கிருஷ்ண கோகலே c) தாதாபாய் நௌரோஜி d) எம்.ஜி. ரானடே 12) கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது. காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது. a) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை b) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது c) கூற்று சரி; காரணம் தவறு d) கூற்று காரணம் இரண்டும் தவறு 13) ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர். கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது. கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது. a) 1,2 b) 1, 3 c) இவற்றுள் எதுவுமில்லை d) இவை அனைத்தும் 14) சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது? a) அரவிந்த கோஷ் b) தாதாபாய் நௌரோஜி c) ஃபெரோஸ் ஷா மேத்தா d) லாலா லஜபதி ராய் 15) பின்வரும் கூற்றுக்களைக் காண்க. (i) 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும். (ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார். (iii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது. மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை. a) (i) மற்றும் (iii) மட்டும் b) (i) மட்டும் c) (i) மற்றும் (ii) மட்டும் d) மேற்கண்ட அனைத்தும் 16) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க. (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 - 1. சுய ஆட்சி (ஆ) விடிவெள்ளிக் கழகம் - 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி (இ) சுயராஜ்யம் - 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது (ஈ) சுதேசி - 4. கல்விக்கான தேசியக் கழகம் a) 3 1 4 2 b) 1 2 3 4 c) 3 4 1 2 d) 1 2 4 3 17) பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது? a) பங்கிம் சந்திர சாட்டர்ஜி - ஆனந்த மடம் b) G.சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம் c) மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச் சட்டம், 1904 d) தீவிர தேசியவாத மையம் - சென்னை 18) கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் a) புலின் பிஹாரி தாஸ் b) ஹேமச்சந்திர கானுங்கோ c) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ் d) குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி 19) கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது. காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது a) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை. c) கூற்று சரி. காரணம் தவறு. d) கூற்று தவறு. காரணம் சரி. 20) கூற்று: வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார். a) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை. c) கூற்று சரி; காரணம் தவறு d) கூற்று தவறு; காரணம் சரி. 21) சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது? a) பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார். b) பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார். c) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார். d) பாரதி பெண்களுக்கா ன “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். 22) தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது? a) திலகர் b) அன்னிபெசண்ட் c) பி.பி. வாடியா d) எச்.எஸ். ஆல்காட் 23) பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது?1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2.1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார். 3.1915ஆம் ஆண்டு "How India wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார் a) 1 மற்றும் 2 b) 2 மற்றும் 3 c) 1மற்றும் 3 d) 1, 2 மற்றும் 3 24) கூற்று: ஜின்னாவை "இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தாரகாரணம்: லக்னோ ஒப்பந்தத் தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார். a) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம். b) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல. c) கூற்று தவறு. காரணம் சரி d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு. 25) பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது? a) மகாத்மா காந்தியடிகள் b) மதன்மோகன் மாளவியா c) திலகர் d) பி.பி. வாடியா 26) 1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் a) முஸ்லீம் லீக் எழுச்சி b) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு c) முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. d) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு. 27) பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக. (அ) கதார் கட்சி - i. 1916 (ஆ) நியூ இந்தியா - ii. 1913 (இ) தன்னாட்சி இயக்கம் - iii. 1909 (ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - iv. 1915 a) ii, iv, i, iii b) iv, i, ii, iii c) i, iv, iii, ii d) ii, iii, iv, i 28) “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் a) லாலா லஜபதிராய் b) வேலண்டைன் சிரோல் c) திலகர் d) அன்னிபெசண்ட் 29) கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது? a) அன்னிபெசண்ட் b) ஏ.சி. மஜும்தார் c) லாலா ஹர்தயாள் d) சங்கர்லால் பாங்கர் 30) அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்? a) சங்கர்லால் பாங்கர் b) ஜவஹர்லால் நேரு c) லாலா லஜபதிராய் d) சி.ஆர். தாஸ் 31) காந்தியடிகளின் அரசியல் குரு யார்? a) திலகர் b) கோகலே c) W.C. பானர்ஜி d) M.G. ரானடே 32) தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் a) கேதா b) தண்டி c) சம்பரான் d) பர்தோலி 33) சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது? a) சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை. b) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை c) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை d) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை 34) இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது? a) டிசம்பர் 31, 1929 b) மார்ச் 12, 1930 c) ஜனவரி 26, 1930 d) ஜனவரி 26, 1931 35) 1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் -ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன? a) சுயராஜ்ய கட்சி b) கதார் கட்சி c) சுதந்திரா கட்சி d) கம்யூனிஸ்ட் கட்சி 36) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. (அ) நாமசூத்ரா இயக்கம் – 1. வடம ேற் கு இந்தியா (ஆ) ஆதிதர்ம இயக்கம் – 2. தென்னிந்தியா (இ) சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா (ஈ) திராவிட இயக்கம் – 4. மேற்கு இந்தியா a) 3 1 4 2 b) 2 1 4 3 c) 1 2 3 4 d) 3 4 1 2 37) ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக. (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. (3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது. (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது. a) 2, 1, 4, 3 b) 1, 3, 2, 4 c) 2, 4, 1, 3 d) 3, 2, 4 ,1 38) பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை? a) பஞ்சாப் துணை ஆளுநர் – 1. ரெஜினால்டு டையர் b) தலித் - பகுஜன் இயக்கம் – 2. டாக்டர். அம்பேத்கர் c) சுயமரியாதை இயக்கம் – 3. ஈ.வெ.ரா. பெ ரியார் d) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம் 39) பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.(i) கேதா சத்தியாகிரகம் (ii) சம்பரான் இயக்கம் (iii) பிராமணரல்லாதார் இயக்கம் (iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் a) ii, iii, i, iv b) iii, ii, i, iv c) ii, i, iv, iii d) ii, i, iii, iv 40) பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல. (i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார். (ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர். (iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது. (iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார். a) i b) i மற்றும் iv c) ii மற்றும் iii d) iii மட்டும் 41) ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை. (அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல் (ஆ) அரசு வழங்கியபட்டங்களைத் திருப்பியளித்தல் (இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல் (ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல் a) அ மற்றும் ஆ b) ஆ மற்றும் இ c) அ மற்றும் ஈ d) இ மற்றும் ஈ 42) கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார். a) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை c) கூற்று சரி, காரணம் தவறு d) கூற்று தவறு, காரணம் சரி 43) கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தே சி ய வ ா தி க ளை த் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும். a) கூற்று தவறு, காரணம் சரி.கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை c) கூற்று சரி, காரணம் தவறு. d) கூற்று தவறு, காரணம் சரி. 44) கீழே குறிப்பிடப்பட் டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்? a) இராஜாஜி b) சித்தரஞ்சன் தாஸ் c) மோதிலால் நேரு d) சத்யமூர்த்தி 45) காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு a) ஏப்ரல் 6, 1930 b) மார்ச் 6, 1930 c) ஏப்ரல் 4, 1939 d) மார்ச் 4, 1930 46) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? a) 1920 b) 1925 c) 1930 d) 1935 47) கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்? a) ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் b) வங்காள சபை c) இந்தியக் குடியரசு இராணுவம் d) இவற்றில் எதுவுமில்லை 48) பின்வருவனவற்றைப் பொருத்துக (அ) கான்பூர் சதி வழக்கு - 1. அடிப்படை உரிமைகள் (ஆ) மீரட் சதி வழக்கு - 2. சூரியா சென் (இ) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை - 3. 1929 (ஈ) இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு - 4. 1924 a) 1, 2, 3, 4 b) 2, 3, 4, 1 c) 3, 4, 1, 2 d) 4, 3, 2, 1 49) கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்? a) புலின் தாஸ் b) சச்சின் சன்யால் c) ஜதீந்திரநாத் தாஸ் d) பிரித்தி வதேதார் 50) பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும் மந்தம் குறித்துச் சரியானவை. (i) இது வடஅமெரிக்காவில் ஏற்பட்டது. (ii) வால் தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும் மந்தத்தை விரைவுபடுத்தியது. (iii) பெரும் மந்தம் வசதிபடைத்தவர்களை மட்டுமே பாதித்தது. (iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர். a) i மற்றும் ii b) i, ii, மற்றும் iii c) i மற்றும் iv d) i, iii மற்றும் iv 51) முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு a) 1852 b) 1854 c) 1861 d) 1865 52) கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். (i) "Chittagong Armoury Raiders Reminiscences" எனும் நூல் கல்பனா தத் என்பவரால் எழுதப்பட்டது(ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார். (iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார் a) i மட்டும் b) i மற்றும் ii c) ii மற்றும் iii d) அனைத்தும் 53) முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது? a) மதராஸ் – அரக்கோணம் b) பம்பாய் – பூனா c) பம்பாய் – தானே d) கொல்கத்தா – ஹூக்ளி 54) கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு _______ a) 1855 b) 1866 c) 1877 d) 1888 55) பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்? a) எம்.என். ராய் b) பகத் சிங் c) எஸ்.ஏ. டாங்கே d) ராம் பிரசாத் பிஸ்மில் 56) கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை? (i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின. (ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொ ழி ற ்சங்கவ ா தி க ளு ம் குற்றஞ்சாட்டப்பட்டனர். (iii) இ வ்வ ழக்கு நீதிப தி H.E. ஹோ ம் ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது. (iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. a) i, ii மற்றும் iii b) i, iii மற்றும் iv c) ii, iii மற்றும் iv d) i, ii மற்றும் iv
0%
+2 History 1st mid term
共有
Mohammedfaizal875
さんの投稿です
Class 12
History
コンテンツの編集
埋め込み
もっと見る
リーダーボード
もっと表示する
表示を少なくする
このリーダーボードは現在非公開です。公開するには
共有
をクリックしてください。
このリーダーボードは、リソースの所有者によって無効にされています。
このリーダーボードは、あなたのオプションがリソースオーナーと異なるため、無効になっています。
オプションを元に戻す
クイズ
は自由形式のテンプレートです。リーダーボード用のスコアは生成されません。
ログインが必要です
表示スタイル
フォント
サブスクリプションが必要です
オプション
テンプレートを切り替える
すべてを表示
アクティビティを再生すると、より多くのフォーマットが表示されます。
オープン結果
リンクをコピー
QRコード
削除
自動保存:
を復元しますか?