1) கணிதப் பாடத்தில் புலமை பெற வாய்ப்பாடுகளைக் --------------------- அவசியம் என ஆசிரியர் வலியுறுத்திக் கூறினார். புலமை பெற a) ஈவிரக்கம் b) தட்டிக் கழித்தல் c) கரைத்துக் குடித்தல் d) கை கூடுதல் 2) திரு. மோகன் ஓவியம் வரைவதில் சிறந்தவர்.எனினும் எளிமையாகவும் அமைதியாகவும் இருப்பார். a) புத்திமான் பலவான் b) தீட்டின மரத்தில் கூர் பார்ப்பதா c) வெள்ளம் வருமுன் அணைபோடு d) நிறைகுடம் தளும்பாது 3) குறளின் முதல் அடியைப் பூர்த்தி செய்க................. ஞாலத்தின் மானப் பெரிது. a) உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே b) வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் c) காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் d) உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் 4) உணவு இல்லாமல் அவதியுற்ற சிவா குடும்பத்திற்கு , அப்பெரியவர் கொடுத்த பணம் பெரிதும் உதவியாக இருந்தது. a) கிள்ளுக் கீரை b) கை கொடுத்தல் c) காது குத்துதல் d) திட்ட வட்டம் 5) வீட்டுக் கதவை யாரோ .......................... வெனத் தட்டும் ஓசையை கேட்ட  நிவித்தா பயந்து போனாள். a) தட தட b) சில சல c) கல கல d) நற நற 6) நிலநடுக்கத்தால்  வீடுகள் ....................  -என சரிந்த விழுத்தன. a) சிடு சிடு b) கல கல c) கிடு கிடு d) மட மட 7) தாரணி உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை இராமு எடுக்கும் தருணத்தில் அம்மாவிடம் பிடிப்பட்டான். a) பெயர் பொறித்தல் b) கையும் களவுமாக c) திட்ட வட்டம் d) கிள்ளுக் கீரை 8) படத்திற்கு ஏற்ற நிகழ்ச்சி என்ன? a) திருமணம் b) புதுமனை புகுவிழா c) திருவிழா d) காதுக் குத்துதல்

ஆண்டு 5 தமிழ் மொழி மொழியணிகள்

순위표

비주얼 스타일

옵션

템플릿 전환하기

자동 저장된 게임을 복구할까요?