1) இப்படத்திற்கு மிகப் பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க. a) மணியும் ஒலியும் போல b) தாயைக் கண்ட சேயைப் போல c) பசுமரத்தாணி போல 2) இவ்வுவமைத்தொடருக்கு மிகப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. a) மனதில் ஆழமாகப் பதிதல். b) இணைந்தே இருப்பது c) இன்பத்துக்குமேல் இன்பம் 3) கோறணி நச்சில் தொற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளை வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழி அரசாங்கம் அடிக்கடி ஒளி, ஒலி பரப்புவதால் மக்கள் மனத்தில் அவை ______________ பதிந்துவிட்டன. a) தாயைக் கண்ட சேயைப் போல b) மணியும் ஒலியும் போல c) பசுமரத்தாணி போல d) இலைமறை காய் போல 4) எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று மகிழ்ச்சியில் இருந்த மணிமொழிக்கு அவள் தந்தை தொடுத்த பரிசு ____________ இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. a) மணியும் ஒலியும் போல b) பசுமரத்தாணி போல c) இலைமறை காய் போல d) பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல 5) பதினான்கு நாள்கள் கோறணி நச்சில் தொற்றுப் பாதிப்பால் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட கோமகன், தொற்றில் இருந்து விடுபட்டுத் தன் குடும்பத்தாரைச் சந்தித்ததில் _________________ பெரு மகிழ்ச்சியடைந்தார். a) தாயைக் கண்ட சேயைப் போல b) பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல c) பசுமரத்தாணி போல d) இலைமறை காய் போல் 6) புதுமணத் தம்பதியர் ஒருமித்த கருத்தோடு ____________________ வாழ வேண்டுமெனத் திருமணத்திற்கு வந்திருந்த பெரியோர்கள் வாழ்த்தினர். a) தாயைக் கண்ட சேயைப் போல b) இலைமறை காய் போல் c) பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல d) மணியும் ஒலியும் போல 7) பல தன்முனைப்புப் பயிற்சிகளுக்குப் பிறகு, தன்னை தைரியப்படுத்துக் கொண்டு கபிலன் நடனம் ஆகும் போட்டியில் பங்குப்பெற்று___________________ இருந்த, அவனுடைய நடனம் ஆடும் திறனை வெளிக்கொணர்ந்தான். a) மணியும் ஒலியும் போல b) இலைமறை காய் போல் c) பசுமரத்தாணி போல d) பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

புறவயக் கேள்விகள் (உவமைத்தொடர்)

순위표

비주얼 스타일

옵션

템플릿 전환하기

자동 저장된 게임을 복구할까요?