1) இலங்கையில் ஏற்படாத இயற்கை அனர்த்தம் எது? a) எரிமலை வெடிப்பு b) வறட்சி c) மண்சரிவு d) நிலநடுக்கம் 2) இயற்கை அனர்த்தமாக கருதக்கூடியது a) மழை b) காற்று c) மண்சரிவு d) கடலலை 3) திட்வா புயலினால் பாதிக்கப்பட்ட நாடு எது a) இலங்கை b) இந்தியா c) மாலைதீவு d) ஜப்பான் 4) வறட்சி என்றால் என்ன.? a) அதிக மழையால் ஏற்படும் நிலை b) நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அதிகரித்தல் c) நீண்ட காலமாக மழை வீழ்ச்சி குறைவடைதல் d) முறையற்ற நிருமாணிப்புக்கள் 5) வறட்சி ஏற்படுவதற்கான மனித செயற்பாடுகள் எது.? a) உலர் காற்றோட்டம் b) சமுத்திரநீரின் வெப்பநிலை அதிகரித்தல் c) மரங்களை நடுதல் d) காடுகளை அழித்தல் 6) மண்சரிவுபசுபிக் சமுத்திரத்தின் மேற்பரப்பிலுள்ள நீரின் வெப்பநிலை அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படும்.? a) புயல் b) சுனாமி c) வறட்சி d) எல்- நினோ 7) படம் விபரிக்கும் இயற்கை அனர்த்தம் எது? a) வறட்சி b) நிலநடுக்கம் c) வெள்ளம் d) மண்சரிவு 8) மண்சரிவு ஏற்படுவதற்கான முன் அறிகுறி தொகுதி எது? a) 100mm ஐ விட அதிக மழைவீழ்ச்சி  b) மழைவீழ்ச்சி குறைவடைதல் c) மண் உரம் குறைதல் d) மரம்களை நடுதல் 9) இலங்கையில் மண்சரிவு அபாயமற்ற பகுதி எது a) கண்டி b) கேகாலை c) நுவரெலியா d) யாழ்ப்பாணம் 10) இலங்கைக்கு மழைவீழ்ச்சி கிடைக்கும் முறை அல்லாதது.? a) தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று b) உகைப்பு மழை c) ரொனாடோ d) வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று 11) மின்னல் கடத்திகள் (Lightning Conductors) கட்டிடங்களில் பொருத்தப்படுவதன் நோக்கம் என்ன? a) கட்டிடங்களுக்கு மின்சாரம் வழங்குதல் b) கட்டிடத்தின் அழகை அதிகரித்தல் c) மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்கு d) மேகங்களை கட்டிடத்தை நோக்கி ஈர்த்தல் 12) மின்னல் தாக்கத்தின் போது பாதுகாப்பாக இருக்க எதனைத் தவிர்க்க வேண்டும்? a) வீட்டுக்குள் இருத்தல் b) தொலைபேசியைப் பயன்படுத்துதல் c) ஜன்னல்களை மூடுதல் d) மின் இணைப்புகளைத் துண்டித்தல் 13) மின்னலின் அழுத்த வேறுபாடு  a) 1 மில்லியன் V b) 10 மில்லியன் V c) 100 மில்லியன் V d) 1000 மில்லியன் V 14) இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் எது.?அழுத்த வேறுபாடு  a) சுனாமி b) வறட்சி c) மின்னல் தாக்கம் d) சூறாவளி 15) நீர் பெருக்கெடுப்பதற்கான காரணம் அல்லாதது a) அதிக மழை b) B: முறையற்ற விதத்திலான நிலப்பயன்பாடு c) C: முறையற்ற விதத்தில் மண் நிரப்பல் d) D:புவி வெப்பமடைதல்

grade : 08 Science unit 13 இயற்கை அனர்த்தம்.

Ledertavle

Visuell stil

Alternativer

Bytt mal

Gjenopprett automatisk lagring: ?