1) பின்வரும் பொருள்களில், குறையொளி ஊடுருவிப் பொருளைத் தேர்ந்தெடுக. a) b) c) d) 2) சிவா வானவில் உருவாக்கத்தை ஆராய எண்ணினான். வெயிலில் தண்ணீரைப் பாய்ச்சினான். அவன் வானவில்லின் வண்ணங்கள் உருவாகுவதைக் கண்டான். வானவில் தோன்றுவதன் காரணம் என்ன? a) ஒளி நீரில் பிரதிபலிப்பதால் b) ஒளி நீரிலும் காற்றிலும் விலகிச் செல்வதால் c) ஒளி நீர்த்துளிகளில் ஊடுருவுவதால் d) ஒளி நீர்த்துளிகளைத் தாண்டிச் செல்வதால் 3) இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி எந்த ஒளியின் கோட்பாட்டிற்கு ஏற்ப செயல்படுகிறது? a) ஒளி விலகல் b) ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் c) ஒளி பிரதிபலிப்பு d) ஒளி தடை செய்தல் 4) பின்வரும் கூற்றுகளுள் எது ஒளி விலகல் கோட்பாட்டினை விளக்கும் சூழலாகும்? a) மரம் சூரிய ஒளியைத் தடை செய்வதால் நிழல் தோன்றுகிறது b) மணி தன் முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்தான் c) குளத்தில் நீந்தும் மீன் குறைவான ஆழத்தில் நீந்துவது போல் தோன்றுகிறது d) அப்பா மகிழுந்தின் பக்கவாட்டுக் கண்ணாடியில் பின்னால் வரும் வாகனங்களைப் பார்த்தார் 5) பின்வரும் பொருள்களில் எது இந்த ஒளிக்கதிர் படத்தைப் பிரதிநிதிக்கிறது? a) கீறல் உள்ள தட்டு b) இலை c) புதிய வெள்ளித்தட்டு d) சுவர்

ஒளி (ஆண்டு 4 & 5)

Ledertavle

Visuell stil

Alternativer

Bytt mal

Gjenopprett automatisk lagring: ?