1) நெடுங்காலம் வாழ்பவன். a) சிரஞ்சீவி  b) நல்லவன் c) கெட்டவன் 2) நூறு ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி. a) தசாப்தம் b) பத்து வருடம் c) சகாப்தம் 3) பகையரசருக்கு வழங்கப்படும் திறைப்பொருள். a) அன்பளிப்பு b) கப்பம் c) களஞ்சியம் 4) ஆதாரம் இல்லாத செய்தி. a) கதை b) கட்டுக்கதை c) ஆதனம் 5) ஒருவர் முழுப் பொருளையும் தனித்து அனுபவித்தல். a) ஏகபோகம் b) தன்னம்பிக்கை c) ஆதனம் 6) ஒருவருக்கு உரித்தான சொத்து. a) ஆதனம் b) உரிமை c) விருப்பம் 7) தமது அனைத்து உடைமைகளையும் இழந்தவன். a) அநாதை b) அகதி c) அபிநயம் 8) தானே தன் உயிரைப் போக்குதல். a) கொலை b) ஆயுட்காலம் c) தற்கொலை 9) ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். a) சகபாடி b) அடிமை c) கைதி 10) தெருக்கள் கூடும் இடம். a) சந்தி b) வீடு c) தெரு 11) சூரியன் , சந்திரனைச் சுற்றி தோன்றும் ஒளி வட்டம். a) பரிவேடம் b) பன்னசாலை c) சுருங்கை 12) மனைவியை இழந்தவன். a) விதவை b) நூலகம் c) தபுதாரன் 13) நிலத்தின் கீழ் அமைந்துள்ள இரகசிய வழி. a) சுயம்பு b) சுருங்கை c) திறைசேரி 14) ஆணும் பெண்ணும் அல்லாத நிலை. a) அலி b) வாதி c) ஊதாரி 15) மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை. a) தினசரி b) அல்லங்காடி c) லயம் 16) சுதந்திரமற்று வாழ்பவன். a) அடிமை b) அந்தப்புரம் c) குரவர் 17) தான் பிறந்த நாடு. a) பிறநாடு b) நாடு c) தாய்நாடு 18) துனையின்றி தனித்து காரியத்தை முடிப்பவன். a) வீரர் b) அசகாய சூரர்  c) சூரர் 19) புராதனப் பொருட்களை சேகரித்து வைக்கும் இடம். a) நூதனசாலை b) பன்னசாலை c) பரிவேடம் 20) தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தங்கியிருக்கும் இடம். a) லயம் b) மஞ்சரி c) குறிஞ்சி

தொடர் மொழிக்கு ஒரு மொழி [ TEACHER . SHANTHI SIVANATHAN ] [ BT/ BT KIRANKULAM SARASWATHY VIDYALAYAM ]

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?