1) M2+அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை a) 26 b) 22 c) 30 d) 24 2) 45 nm அலை நீளம் உடைய ஒளியின் ஆற்றல் a) 6.67×1015J b) 6.67×1011J c) 4.42×10-18 J d) 4.42×10-15J 3) இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் E1மற்றும் E2 முறையே 25 eV மற்றும் 50 eV அவைகளில் அலை நீளங்கள் ʎ1 மற்றும் ʎ 2 ஆகியவற்றின் இடையேயான தொடர்பு a) ʎ1/ʎ2=1 b) ʎ1=2ʎ2 c) ʎ1=√25×50 ʎ2 d) 2ʎ1= ʎ2 4) மின்புலத்தில் நிறமாலை கோடுகள் பிரிகை அடையும் விளைவு a) சீமன் விளைவு b) மறைத்தல் விளைவு c) காம்ப்டன் விளைவு d) ஸ்டார்க் விளைவு 5) போர் அணுக்கொள்கையின் அடிப்படையில் ஹைட்ரஜன் அணுவில் பின்வரும் எந்த பரிமாற்றம் குறைவான ஆற்றல் உடைய போட்டானை தரும் a) n=6 இல் இருந்து n=1 b) n=5 இல் இருந்து n=4 c) n=5 இல் இருந்து n=3 d) n=6 இல் இருந்து n=5 6) கூற்று: He+ ன் நிறமாலையானது ஹைட்ரஜனின் நிறமாலையினை ஒத்திருக்கும். காரணம்: He+ ம் ஒரு எலக்ட்ரானைக் கொண்ட ஒரு அமைப்பாகும்  a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது ஆனால் காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கமாகும் b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் இல்லை c) கூற்று சரி காரணம் தவறு d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 7) பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுக்களின் வழியே பெற்றிருப்பது எது a) dz2,dxy b) dxz,dyz c) dz2,dx2-y2 d) dxy, dx2-y2 8) ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களையும் வேறுபடுத்தி அறிய உதவுவது a) கோண உந்த குவாண்டம் எண் b) தற் சுழற்சி குவாண்டம் எண் c) காந்த குவாண்டம் எண் d) ஆர்பிட்டால் குவாண்டம் எண் 9) ஒரு துணைக் கூட்டில் உள்ள அதிகபட்சமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுவது a) 2n2 b) 2l+1 c) 4l+2 d) மேற்கண்டுள்ள எதுவும் இல்லை 10) n=3 ,l=1 மற்றும் m=-1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை எத்தனை எலக்ட்ரான்கள் பெற்றிருக்க முடியும் a) 4 b) 6 c) 2 d) =10 11) கூற்று: 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முறையே 1,1 காரணம்: ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முதன்மை குவாண்டம் எண்ணை மட்டுமே பொருத்து அமையும் a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல c) கூற்று சரி காரணம் தவறு d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 12) n=3 எனில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை a) ns___> (n-2)f__>(n-1)d___>np b) ns__>(n-1)d__>(n-2)f__>np c) ns__>(n-2)f__>np __>(n-1)d d) இவை எதுவும் சரி இல்லை 13) n=3 என்ற முதன்மை குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்பிட்டால்களின் மொத்த எண்ணிக்கை a) 9 b) 8 c) 5 d) 7 14) அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n+l)=8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும் a) 30 b) 17 c) 15 d) தீர்மானிக்க இயலாது 15) 3dxy ஆர்பிட்டாலில் yz தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி a) பூஜ்ஜியம் b) 0.50 c) 0.75 d) 0.90 16) நிலை மற்றும் உந்தத்தின் நிச்சயமற்ற தன்மை சமம் எனில் அதன் திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்ற தன்மை a) 1/m√h/π b) √h/π c) 1/2m√h/π d) h/4π 17) 100 cm s-1 வேகத்தில் இயங்கும்100g நிறையுடைய துகள் ஒன்றின் டி-பிராக்ளி அலை நீளம் a) 6.6×10-29cm b) 6.6×10-30cm c) 6.6×10-31 cm d) 6.6×10-32cm 18) டியூட்ரியத்தின் திசைவேகம் துகளை காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும் போது டியூட்ரியம் அணுவிற்கும் துகளிற்கும் இடையேயான டீபிராக்ளி அலை நீளங்களின் விகிதம் a) 4 b) 0.2 c) 2.5 d) 0.4 19) ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்ட பாதையின் ஆற்றல் மதிப்பு-E அதன் முதல் வட்டப்பாதையில் ஆற்றல் மதிப்பு a) -3E b) -E/3 c) -E/9 d) -9E 20) பின்வருவனவற்றுள் ஹென்சன் பர்கின் நிச்சயமற்ற தன்மையினை குறிப்பிடாத சமன்பாடு எது a) ∆x.∆p>=h/4π b) ∆x.∆v>=h/4πm c) ∆E.∆t>=h/4π d) ∆E.∆x>=h/4π

அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி

Табела

Визуелни стил

Поставке

Промени шаблон

Врати аутоматски сачувано: ?