திரை கடல் ஓடியும் திரவியம் தேடு - கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்., கடுகு சிறுத்தாலும் காரம் போகாது - கடுகு அளவில் சிறிதாக இருந்தாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல, சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள், ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும் - குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்., கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு - நாம் கற்றறிந்தது மிகச்சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன, குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும், அகல உழுவதினும் ஆழ உழுவது மேல் - மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு, தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா? - நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது, ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற - ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெற வேண்டும், திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை - துன்பத்திலிருந்து மீள வழி தெரியாதவருக்கு ஆண்டவன்தான் துணை, நொருங்கத் தின்றால் நூறு வயது - உணவை நன்கு மென்று தின்றால் நீண்ட ஆயுளைப் பெறலாம்,

பழமொழிகள் படிவம் 4

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?