1) சக்தி என்றால் என்ன? a) ஓரு வேலையைச் செய்வதற்கான வேகம் b) ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல் c) ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம் d) ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு 2) கீழ்காணும் அனைத்தும் சக்தியின் மூலங்கள் ஆகும்,ஒன்றைத் தவிர a) காற்று b) சூரியன் c) நீர் d) மழை 3) சூரியன் அனைத்து சக்திகளுக்கும் மூலமாக விளங்குகிறது.சூரியன் மொத்தம் எத்தனை சக்தியின் வகையை நமக்குக் கொடுக்கின்றது? a) ஒன்று b) இரண்டு c) மூன்று d) நான்கு 4) கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன? a) இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி b) இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி c) மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி d) இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி 5) சூரிய சக்தி ------------ மின்சக்தி --------- இயக்க சக்தி a) சூரிய சக்தி மகிழுந்து b) சூரிய சக்தி தெருவிளக்கு c) கணிப்பொறி d) சூரிய அடுப்பு 6) ஒளி விலகல் என்றால் என்ன? a) ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளை ஊடே ஊடுருவ முடியாமல் தடைப்படும் b) ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும் c) ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவாதது. 7) ஒளி _____________________ மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும். a) பளபளப்பான b) சொரசொரப்பான 8) மேற்க்காணும் விலங்கைப் போல் ஒரே மாதிரியான சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ள விலங்குகள். a) பூனை b) புலி c) நண்டு 9) அட்டை சுவாச உறுப்பு இல்லாத விலங்கு a) சரி b) தவறு 10) திமிங்கலத்தின் சுவாச உறுப்பு என்ன? a) நுரையீரல் b) ஈரமானத் தோல் c) சுவாசத்துளை d) செவுள் 11) படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது? a) மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல் b) நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு c) மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல் 12) மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ? a) வியர்வை b) சிறுநீர் c) மலம் d) கரிவளி 13) இதன் பயன்பாடு என்ன? a) முகத்தின் அழகைப் பார்க்க b) பின்னால் வரும் வாகனத்தைக் கவனிக்க c) வளைந்த பாதையில் வரும் வாகனத்தைப் பார்க்க 14) இதன் பயன்பாடு என்ன? a) சொத்தைப்பற்களைச் சுலபமாகப் பார்க்க b) பின்னால் வரும் வாகனத்தைக் கவனிக்க c) முகத்தின் அழகைப் பார்க்க 15) இதன் பயன்பாடு என்ன? a) சொத்தைப்பற்களைச் சுலபமாகப் பார்க்க b) வளைந்த பாதையில் வரும் வாகனத்தைப் பார்க்க c) கடலின் மேல்மட்டத்தில் வரும் கப்பல்களைப் பார்க்க

ลีดเดอร์บอร์ด

สไตล์ภาพ

ตัวเลือก

สลับแม่แบบ

คืนค่าการบันทึกอัตโนมัติ: ใช่ไหม