1) இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் a) 2500 கி.மீ b) 2935 கி.மீ c) 3214 கி.மீ d) 2814 கி.மீ 2) பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு a) நர்மதா b) கோதாவரி c) கோசி d) தாமோதர் 3) மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி .... என அழைக்கப்படுகிறது. a) கடற்கரை b) தீவு c) தீபகற்பம் d) நீர்ச்சந்தி 4) பாக்நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா......ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது. a) கோவா b) மேற்கு வங்காளம் c) இலங்கை d) மாலத்தீவு 5) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்.... a) ஊட்டி b) கொடைக்கானல் c) ஆனைமுடி d) ஜின்டா கடா 6) பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி.... a) பாபர் b) தராய் c) பாங்கர் d) காதர் 7) பழவேற்காடு ஏரி.... மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது a) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா b) கர்நாடகா மற்றும் கேரளா c) ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் d) தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் 8) மேற்கத்திய இடையுறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி a) தமிழ்நாடு b) கேரளா c) பஞ்சாப் d) மத்தியப் பிரதேசம் 9) கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ... காற்றுகள் உதவுகின்றன. a) லுா b) நார்வெஸ்டர்ஸ் c) மாஞ்சாரல் d) ஜெட் காற்றோட்டம் 10) ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு... ஆகும் a) சம மழைக் கோடுகள் b) சம அழுத்தக்கோடுகள் c) சமவெப்பக் கோடுகள் d) அட்சக் கோடுகள் 11) இந்தியாவின் காலநிலை .... ஆக பெயரிடப்பட்டுள்ளது a) அயன மண்டல ஈரக் காலநிலை b) நிலநடுக்கோட்டுக் காலநிலை c) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை d) மித அயனமண்டலக் காலநிலை 12) பருவக்காற்றுக் காடுகள் ...... என்றும் அழைக்கப்படுகின்றன a) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் b) இலையுதிர்க் காடுகள் c) மாங்குரோவ் காடுகள் d) மலைக் காடுகள் 13) சேஷாசலம் உயிர்க்கோளப் பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்... a) தமிழ்நாடு b) ஆந்திரப்பிரதேசம் c) மத்தியப் பிரதேசம் d) கர்நாடகா 14) யுனெஸ்கோவின் உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஓர் அங்கமாக இல்லாதது ..... a) நீலகிரி b) அகத்திய மலை c) பெரிய நிக்கோபர் d) கட்ச் 15) ஓதக்காடுகள் இதனைச் சுற்றிக் காணப்படுகிறது (பொருந்தாதை விடையைத் தெரிவு செய்க) a) பாலைவனம் b) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா c) கோதாவரி டெல்டா d) மகாநதி டெல்டா 16) இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் (பொருந்தாதை விடையைத் தெரிவு செய்க) a) அட்ச பரவல் b) உயரம் c) கடலிலிருந்து அமைந்துள்ள துாரம் d) மண் 17) ...... மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாகக் காணப்படுகிறது a) வண்டல் b) கரிசல் c) செம்மண் d) உவர் மண் 18) எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது? a) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் b) இந்திய வானியல் துறை c) இந்திய மண் ஆய்வு நிறுவனம் d) இந்திய மண் அறிவியல் நிறுவனம் 19) ஆறுகளின் மூலம் உருவாகும் மண் a) செம்மண் b) கரிசல் மண் c) பாலைமண் d) வண்டல் மண் 20) இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை a) உறிராகுட் அணை b) பக்ராநங்கல் அணை c) மேட்டூர் அணை d) நாகர்ஜீனா சாகர் அணை

RSK win 10-ம் வகுப்பு - சமூக அறிவியல் - புவியியல் - ஒரு மதிப்பெண் (சரியான விடையைத் தெரிவு செய்க)

Classifica

Stile di visualizzazione

Opzioni

Cambia modello

Ripristinare il titolo salvato automaticamente: ?