1) தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது? a) மார்ச் 23, 1940 b) ஆகஸ்ட் 8, 1940 c) அக்டோபர் 17, 1940 d) ஆகஸ்ட் 9, 1942 2) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. (அ) இந்து-முஸ்லீம் கலவரம் -1. மோகன் சிங் (ஆ) ஆகஸ்ட் கொடை -2. கோவிந்த் பல்லப் பந்த் (இ) பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் -3. லின்லித்கோபிரபு (ஈ) இந்திய தேசிய இராணுவம் -4. நவகாளி a) 3 4 2 1 b) 4 2 1 3 c) 4 3 2 1 d) 3 2 4 1 3) கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது? a) வேவல் பிரபு b) லின்லித்கோ பிரபு c) மௌண்ட்பேட்டன் பிரபு d) இவர்களில் யாருமில்லை 4) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க (அ) அமெரிக்கக் குடியரசுத் தலைவர் - 1. டோஜா (ஆ) சீனக் குடியரசுத் தலைவர் - 2. வின்ஸ்டன் சர்ச்சில் (இ) பிரிட்டிஷ் பிரதமர் - 3. ஷியாங் கே ஷேக் (ஈ) ஜப்பான் பிரதமர் - 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட் a) 1 4 3 2 b) 1 3 2 4 c) 4 3 2 1 d) 4 2 3 1 5) சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்? a) 1938 b) 1939 c) 1940 d) 1942 6) மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்? a) சட்டமறுப்பு இயக்கம் b) ஒத்துழையாமை இயக்கம் c) வெள்ளையனே வெளியேறு இயக்கம் d) இவை அனைத்தும் 7) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்? a) உஷா மேத்தா b) பிரீத்தி வதேதார் c) ஆசப் அலி d) கேப்டன் லட்சுமி 8) இந்திய தேசிய இராணுவப்படைவீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்? a) ஜவஹர்லால் நேரு b) மோதிலால் நேரு c) இராஜாஜி d) சுபாஷ் சந்திர போஸ் 9) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்? a) வேவல் பிரபு b) லின்லித்கோ பிரபு c) மௌண்ட்பேட்டன் பிரபு d) வின்ஸ்டன் சர்ச்சில் 10) கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை. காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது a) கூற்று மற்றும் காரணம் சரி; காரணம் கூற்றை விளக்குகிறது b) கூற்று மற்றும் காரணம் சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை. c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி. 11) இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது? a) ஜெர்மனி b) ஜப்பான் c) பிரான்ஸ் d) அமெரிக்க ஐக்கிய நாடுகள் 12) இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் _________ ஆகும் a) சுபாஷ் படைப்பிரிவு b) கஸ்தூர்பா படைப்பிரிவு c) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு d) ஜான்ஸி ராணி படைப்பிரிவு 13) சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்? a) இரங்கூன் b) மலேயா c) இம்பால் d) சிங்கப்பூர் 14) இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது? a) செங்கோட்டை, புதுடெல்லி b) பினாங் c) வைஸ் ரீகல் லாட்ஜ், சிம்லா d) சிங்கப்பூர் 15) 1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி a) வேவல் பிரபு b) லின்லித்கோ பிரபு c) மௌண்ட்பேட்டன் பிரபு d) கிளமண்ட் அட்லி 16) 1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? a) ஜவஹர்லால் நேரு b) மௌலானா அபுல் கலாம் ஆசாத் c) ராஜேந்திர பிரசாத் d) வல்லபாய் படேல் 17) சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க (i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல் (ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம் (iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை (iv) இராஜாஜி திட்டம் a) ii, i, iii, iv b) i, iv, iii, ii c) iii, iv, i, ii d) iii, iv, ii, i 18) பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க (i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை (ii) நேரடி நடவடிக்கை நாள் (iii) ஆகஸ்ட் கொடை (iv) தனிநபர் சத்தியாகிரகம் a) i, ii, iii, iv b) iii, i, ii, iv c) iii, iv, i, ii d) i, iii, iv, ii 19) இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்? a) வின்ஸ்டன் சர்ச்சில் b) மௌண்ட்பேட்டன் பிரபு c) கிளமண்ட் அட்லி d) F. D. ரூஸ்வெல்ட் 20) பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்? a) ஆகஸ்ட் 15, 1947 b) ஜனவரி 26, 1950 c) ஜூன், 1948 d) டிசம்பர், 1949 21) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. (அ) ஜேவிபி குழு - 1. 1928.(ஆ) சர் சிரில் ராட்கிளிஃப் - 2. மாநில மறுசீரமைப்பு ஆணையம்.(இ) பசல் அலி - 3. 1948.(ஈ) நேரு குழு அறிக்கை - 4. எல்லை வரையறைஆணையம் a) 1 2 3 4 b) 3 4 2 1 c) 4 3 2 1 d) 4 2 3 1 22) பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்.(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் a) ii, i, iii b) i, ii, iii c) iii, ii, I d) ii, iii, i 23) பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.(அ) சீன மக்கள் குடியரசு- 1. பெல்கிரேடு. (ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947.(இ) ஆசிய உறவுகள் மாநாடு- 3. ஏப்ரல் 1955.(ஈ) அணிசேரா இயக்கத்தின் தோற்றம்- 4. ஜனவரி 1, 1950 a) 3 4 2 1 b) 4 2 3 1 c) 4 3 2 1 d) 3 2 4 1 24) பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.(i) சீன மக்கள் குடியரசு.(ii) சீனாவுடனான இந்தியப் போர்.(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்.(iv) பஞ்சசீலக் கொள்கை.(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம் a) i, ii, iii, iv, v b) iii, i , v, iv, ii c) iii, iv, i, v, ii d) i, iii, iv, v, ii 25) மகாத்மாகாந்தியடிகள் படுகொலைசெய்யப்பட்ட நாள் __________ a) ஜனவரி 30, 1948 b) ஆகஸ்ட் 15, 1947 c) ஜனவரி 30, 1949 d) அக்டோபர் 2, 1948 26) ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் __________ a) பொட்டி ஸ்ரீராமுலு b) பட்டாபி சீத்தாராமையா c) கே.எம். பணிக்கர் d) டி. பிரகாசம் 27) அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் a) இராஜேந்திர பிரசாத் b) ஜவகர்லால் நேரு c) வல்லபாய் படேல் d) மௌலானா அபுல் கலாம் ஆசாத் 28) பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது? a) அமேதி b) பம்பாய் c) நாக்பூர் d) மகவ் 29) கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான மு ரண்பாடுகளையும் கொண்டிருந்தது.காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. a) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை. c) கூற்று சரி காரணம் தவறு. d) கூற்று தவறு காரணம் சரி. 30) அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது? a) மார்ச் 22, 1949 b) ஜனவரி 26, 1946 c) டிசம்பர் 9, 1946 d) டிசம்பர் 13, 1946 31) அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? a) ஜனவரி 30, 1949 b) ஆகஸ்ட் 15, 1947 c) ஜனவரி 30, 1948 d) நவம்பர் 26, 1949 32) மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் __________ a) காஷ்மீர் b) அஸ்ஸாம் c) ஆந்திரா d) ஒரிஸா 33) பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக ..(i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள். (ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு. (iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் a) ii, i, iii b) i, iii, ii c) iii, ii, i d) ii, iii, i 34) இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது. a) முதலாளித்துவ b) சமதர்ம c) தெய்வீக d) தொழிற்சாலை 35) இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது? a) 1951 b) 1952 c) 1976 d) 1978 36) கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.(அ) தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம் - 1. 1951-56 (ஆ) இந்திய அறிவியல் நிறுவனம் - 2. இரண்டாவது ஐ ந்தாண் டு திட்டம் (இ) மகலனோபிஸ் - 3. 1909 (ஈ) முதலாவது ஐந்தாண்டு திட்டம் - 4. 1956 a) 1 2 3 4 b) 3 1 4 2 c) 4 3 2 1 d) 4 2 3 1 37) நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? a) 1961 b) 1972 c) 1976 d) 1978 38) பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர a) ராம் மனோகர் லோகியா b) ஜெயப்பிரகாஷ் நாராயணன் c) வினோபா பாவே d) சுந்தர் லால் பகுகுணா 39) கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது. காரணம்: பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர். a) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை. c) கூற்று சரி. காரணம் தவறு. d) கூற்று தவறு. காரணம் சரி. 40) தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? a) 1951 b) 1961 c) 1971 d) 1972 41) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? a) 2005 b) 2006 c) 2007 d) 2008 42) எந்த ஆண்டு இந்திய ப�ொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன? a) 1961 b) 1991 c) 2008 d) 2005 43) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது? a) 200 b) 150 c) 100 d) 75 44) டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது? a) 1905 b) 1921 c) 1945 d) 1957 45) 1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை ப�ொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன? a) 5 b) 7 c) 6 d) 225 46) முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது? a) உருது b) இந்தி c) மராத்தி d) பாரசீகம் 47) லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் _______ a) ரஹமத்துல்லா சயானி b) சர் சையது அகமது கான் c) சையது அமீர் அலி d) பஃருதீன் தயாப்ஜி 48) கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது. காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக – அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது. a) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை. b) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது c) கூற்று தவறு காரணம் சரி. d) கூற்று, காரணம் இரண்டும் தவறு. 49) இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் ________ a) இராஜாஜி b) ராம்சே மெக்டொனால்டு c) முகமது இக்பால் d) சர் வாசிர் ஹசன் 50) 1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது a) 2 மாகாணங்கள் b) 7 மாகாணங்கள் c) 5 மாகாணங்கள் d) 8 மாகாணங்கள் 51) காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது a) 5 பிப்ரவரி, 1939 b) 22 டிசம்பர், 1940 c) 23 மார்ச், 1937 d) 22 டிசம்பர், 1939 52) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம் (ஆ) சையது அகமது கான்- 2. தயானந்த சரஸ்வதி (இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை (ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள் a) 3 1 4 2 b) 1 2 3 4 c) 4 3 2 1 d) 2 3 4 1 53) பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது கான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார். (ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து சபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது a) கூற்று (i) மற்றும் (ii) சரி b) கூற்று (i) சரி (ii) தவறு c) கூற்று (i) தவறு (ii) சரி d) கூற்று (i) மற்றும் (ii) தவறு 54) எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது? a) 25 டிசம்பர், 1942 b) 16 ஆகஸ்ட், 1946 c) 21 மார்ச், 1937 d) 22 டிசம்பர், 1939 55) வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் a) லின்லித்கோ b) பெதிக் லாரன்ஸ் c) மௌண்ட்பேட்டன் d) செம்ஸ்ஃபோர்டு 56) கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு வாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும் காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர். a) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றைவிளக்கவில்லை. b) கூற்று சரி, காரணம் தவறு. c) கூற்று மற்றும் காரணம் தவறு. d) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 57) பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.(அ) இந்துமத மறுமலர்ச்சி - 1. M.S. கோல்வாக்கர் (ஆ) கலீஃபா பதவி ஒழிப்பு - 2. ஆரிய சமாஜம் (இ) லாலா லஜபதி ராய் - 3. 1924 (ஈ) ராஷ்டிரிய சுயசேவா சங்கம் - 4. இந்து - முஸ்லிம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல் a) 2 4 3 1 b) 3 4 1 2 c) 1 3 2 4 d) 2 3 4 1
0%
+2 History quarterly
Condividi
di
Mohammedfaizal874
Class 12
History
Modifica contenuto
Stampa
Incorpora
Altro
Compiti
Classifica
Mostra di più
Mostra meno
Questa classifica è privata. Fai clic su
Condividi
per renderla pubblica.
Questa classifica è stata disattivata dal proprietario della risorsa.
Questa classifica è disattivata perché le impostazioni sono diverse da quelle del proprietario della risorsa.
Ripristina le opzioni
Telequiz
è un modello a risposta aperta. Non genera punteggi validi per una classifica.
Login necessario
Stile di visualizzazione
Tipi di caratteri
Abbonamento richiesto
Opzioni
Cambia modello
Mostra tutto
Mentre esegui l'attività appariranno altri formati.
Apri risultati
Copia link
Codice QR
Elimina
Ripristinare il titolo salvato automaticamente:
?