1) அடி காட்டில் , நடு மாட்டில் , நுனி வீட்டில் அது என்ன? a) புல் b) தும்பி c) நெல் 2) காற்று நுழைந்ததும் கானம் பாடுவான், அவன் யார்? a) நுளம்பு b) புல்லாங்குழல் c) ஊதுவர்த்தி 3) வீட்டில் இருப்பான் ஒரு காவலாளி , வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி , அவர்கள் யாவர்? a) குடையும், தொப்பியும் b) நாயும், செருப்பும் c) பூட்டும், திறப்பும் 4) தனித்தும் உண்ண முடியாது, இது சேராவிட்டாலும் உண்ண முடியாது. அது என்ன? a) உப்பு b) வெங்காயம் c) உள்ளி 5) மரத்தில் தொங்கும் இனிப்புப் பொட்டலத்திற்குள் காவலர்களே அதிகமாம். அது என்ன? a) தூக்கணாங்குருவிக் கூடு b) தேன்சிட்டு கூடு c) தேன் கூடு 6) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன? a) அரும்பு b) கரும்பு c) இரும்பு 7) இணைபிரிய மாட்டார்கள் நண்பர்கள் அல்ல, ஒன்று சேர மாட்டார்கள் பகைவர்களல்லர். அவர்கள் யார்? a) கடிகார முட்கள் b) தண்டவாளம் c) கத்தரிக்கோல் 8) கண்ணில் தென்படும் , கையில் பிடிபடாது. அது என்ன? a) மீன் b) புகை c) கண்ணீர் 9) கண்ணுக்கு அலங்காரம் , பார்வைக்கு உத்தரவாதம் அது என்ன? a) கண் மை b) பவுடர் c) மூக்குக்கண்ணாடி 10) ஓடையிலே ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன ? a) கண்ணீர் b) தண்ணீர் c) வெந்நீர் 11) வெட்டிக்கொள்வான் , ஆனால் ஒட்டிக்கொள்வான். அவன் யார்? a) கத்தி b) தண்டவாளம் c) கத்தரிக்கோல் 12) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன ? a) மெழுகுவர்த்தி b) அடுப்பு c) ஊதுவர்த்தி 13) தலையிலே கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன ? a) அன்னாசி b) அன்னமுன்னா c) தேங்காய் 14) தலைக்குள் கண்கள் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான். அவன் யார் ? a) தேங்காய் b) மாங்காய் c) இளநீர் 15) மழையிலே நனைவேன். வெயிலில் காய்வேன். வெளியில் மலர்வேன். வீட்டில் சுருங்குவேன். நான் யார்? a) தொப்பி b) செருப்பு c) குடை 16) வெள்ளத்தாலும் போகாது. வெண்தணலிலும் வேகாது. கொள்ளையடிக்கவும் முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? a) அரிசி b) செல்வம் c) கல்வி 17) சின்னப் பெட்டிக்குள் கீதங்கள் ஆயிரமாயிரம் . அது என்ன? a) பென்சில்பெட்டி b) ஆர்மோனியப்பெட்டி c) நிறப்பென்சில் பெட்டி 18) காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும். அது என்ன ? a) அழிறப்பர் b) பென்சில் c) பேனை 19) வால் உண்டு உயிரில்லை. அங்கும் இங்கும் பறப்பான். அவன் யார்? a) பம்பரம் b) பட்டம் c) மின்விசிறி 20) ஈட்டிப்படை வென்று, காட்டுப்புதர் கடந்து, இனிமையான புதையலைக் கண்டெடுக்கலாம். அது என்ன? a) பனம்பழம் b) பலாப்பழம் c) பப்பாசிப்பழம் 21) ஊரைச் செழிக்க வைத்து உல்லாச நடை பயின்று, வளைந்து குலுங்கி வையகமெல்லாம் சுற்றி வருவாள் ஒரு வனிதை. அவள் யார்? a) பொய்கை b) மங்கை c) கங்கை 22) எல்லை இல்லா அழகி, ஒட்டி நிற்கும் இரும்பையும் கவர்ந்து தன்பால் இழுப்பாள். அவள் யார்? a) மயில் b) ரோசா c) காந்தம் 23) ஒளி கொடுக்கும் விளக்கல்ல , வெப்பம் தரும் நெருப்பல்ல , பளபளக்கும் தங்கமல்ல அது என்ன? a) மதி b) சூரியன் c) சந்திரன் 24) ஓடிப்படர்வேன் கொடி அல்ல, ஒளி மிக உண்டு நிலவுமல்ல , மனைகளை அலங்கரிப்பான் மலரல்ல. அது என்ன? a) மின்னல் b) மின்மினிப்பூச்சி c) மின்சாரம் 25) வாசலிலே வண்ணப்பூ , தினம் தினம் மாறும் பூ, தெளிவாகத் தோன்றும் பூ. அது என்ன ? a) கோலம் b) சிரிப்பு c) குங்குமப்பூ 26) உள்ளே இருந்தால் ஓடித்திரிவான். வெளியே வந்தால் விரைவில் மடிவான். அவன் யார்? a) தவளை b) மீன் c) ஆமை 27) முட்டையிடும் அடைகாக்கத் தெரியாது. கூட்டிலே குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. அது என்ன? a) கோழி b) குயில் c) தீக்கோழி 28) முகத்தைக் காட்டுவான், முதுகைக் காட்ட மாட்டான். அவன் யார்? a) முகம் பார்க்கும் கண்ணாடி b) மூக்குக் கண்ணாடி c) தொலைக்காட்டி 29) உடல் சிவப்பு ; வாய் திறந்திருக்கும் : உணவு காகிதம். அது என்ன? a) நாக்கு b) அஞ்சற்பெட்டி c) வாழைப்பொத்தி 30) ஏற முடியாத இடத்தில் எட்டப் பறக்கும் பனித்துளி. அது என்ன? a) சூரியன் b) நிலா c) முகில்

Grade 4 & 5 விடுகதைகள் By - Rajitha Suresh

Skor Tablosu

Görsel stil

Seçenekler

Şablonu değiştir

Otomatik olarak kaydedilen geri yüklensin mi: ?