1) கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே a) சகப்பனைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள் b) அயனி மற்றும் தகப்பனைப்பு படிங்கள் c) இரண்டும் சகப்பினைப்பு படிகங்கள் d) இரண்டும் மூலக்கூறு படிகங்கள் 2) AxBy அயனைப்படிகம் fcc அமைப்பில் படிவமாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் A அயனியானது கன சதுரத்தின் மையத்திலும் அமைந்துள்ளது எனில் AxBy சரியான வாய்ப்பாடு a) AB b) AB3 c) A3B d) A8B6 3) கனசதுர நெருங்கி பொதிந்த அமைப்பில், நெருங்கி போதிந்த அணுக்களுக்கும் நான்முகி துணைகளுக்கும் இடையேயான விகிதம் a) 1:1 b) 1:2 c) 2:1 d) 1:4 4) திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்காக ஒரு எடுத்துக்காட்டு? a) தகப்பனைப்பு திண்மம் b) உலோகத் திண்ம்ம c) மூலக்கூறு திண்மம் d) அயனி திண்மம் 5) கூற்று: மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம். காரணம்: மோனோ கிளினிக் படிக அமைப்பிற்குa≠b≠c மேலும் ᵅ=ᵧ=90⁰ᵦ≠90⁰ a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றுளுக்கான சரியான விளக்கமாகும் b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 6) ஃ புளூரைட் வடிவமைப்பை பெற்றுள்ள கால்சியம் ஃபுளூரைடில் காணப்படும் Ca3+மற்றும் F-அயனிகளின் அணைவு எண்கள் முறையே a) 4 மற்றும் 2 b) 6 மற்றும் 6 c) 8 மற்றும் 4 d) 4 மற்றும் 8 7) அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அளவு கூடுகளின் எண்ணிக்கையினை கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது. a) 6.023x1023 b) 6.023x1022 c) 60.23x1023 d) [6.022x1023/8x40] 8) ஒரு திண்மத்தின் M என்ற அணுக்கள் ccp அணி கோவை புள்ளிகளில் இடம் பெறுகின்றன. மேலும்(⅓) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அலுவாள் நிரப்பப்பட்டுள்ளது.M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மம் a) MN b) M3N c) MN3 d) M3N2 9) A+மற்றும் B-ஆகியவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98x10-10m ஆகும்.ABல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண். a) 8 b) 2 c) 6 d) 4 10) CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm ,அணுக்களுக்கு இடையான தொலைவு. a) 400pm b) 800pm c) √3 x 100pm d) (√3/2) x 400pm 11) XY. என்ற திண்மம் NaCl வடிவமைப்பை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில் எதிரணியின் ஆர மதிப்பு a) (100/0.414) b) (0.732/100) c) 100 x 0.414 d) (0.414/100) 12) bcc அழகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தில் சதவீதம். a) 48% b) 23% c) 32% d) 26% 13) ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனசதுர அமைப்பில் படிகமானால் அலகு கூட்டின் விளிம்பு நிளம்ம் a) 488.5pm b) 848.5pm c) 884.5pm d) 484.5pm 14) எளிய கனசதுர அமைப்பில் மொத்த கன அளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம் a) (π/4√2) b) (π/6) c) (π/4) d) (π/3√2) 15) Nacl வணிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் a) F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல் b) புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொலிக்கப்படுவது c) Na+அயனிகளால் ஒளிவிலகல அடைதல் d) மேற்கண்டுள்ள அனைத்தும் 16) sc,bcc மற்றும் மற்றும் fcc ஆகிய கனசதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை'a' என குறிப்பிட்டால் அவமைப்புகளில் காணப்படும் கோலங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே. a) (1/2a: √3/2a: √2/2a) b) (√1a: √3a: √2a) c) (1/2a: √3/4a: 1/2√2a ) d) (1/2a:√3a:1/√2a) 17) ஒரு கனசதுரத்தின் விளிம்பு நீளம்'a' எனில் பொருள் மைய கனசதுர அமைப்பின் மையத்தில் உள்ள அளவிற்கு ம் கன சதுரத்தின் ஏதேனும் ஒரு மூலையில் உள்ள ஒரு அணுவிற்கும் இடையேயான தொலைவு. a) (2/√3)a b) (4/√3)a c) (√3/4)a d) (√3/2)a 18) பொட்டாசியம் (அணு எடை 39gmol-1)bcc வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கு இடையேயான தொலைவு 4.52A⁰ ஆக உள்ளது. அதன் அடர்த்தி a) 916 kg m-3 b) 2142 kg m-3 c) 452 kg m-3 d) 390 kg m-3 19) ஒரு படிவத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது. a) சமமற்ற எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அணிகள் அணி கோவையில் இடம் பெறாதிருத்தல் b) சமமான எண்ணிக்கையில் எதிர் அணிகள் அணி கோவையில் இடம் பெறாதிருத்தல் c) ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம்பெறாமல் அணி கோவை இடைவெளியில் இடம்பெறுதல். d) படிக அணி கோவையில் எந்த ஒரு அயனியும் இடம்பெறாத நிலை இல்லாதிருத்தல் 20) ஒரு படிகத்தின் நேர் அதன் வழக்கமான இடத்தில் இடம்பெறாமல் படிக அணி கோவை இடைவெளியில் இடம்பெற்று இருப்பின் படிக குறைபாடு இவள் இவ்வாறாக அழைக்கப்படுகிறது. a) ஷாட்கி குறைபாடு b) F-மையம் c) பிராங்கள் குறைபாடு d) வேதி வினைக்கூறு விகிதமற்ற குறைபாடு 21) கூற்று: பிராங்கள் குறைபாட்டின் காரணமாக படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது. காரணம்பிராங்கள் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் வணிகத்தை விட்டு வெளியேறுகின்றன.ள் a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும். b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 22) உலோக குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம். a) NaCl b) FeO c) ZnO d) KCl 23) X மற்றும் Y ஆகிய இரு வேறு அணுக்களை கொண்ட ஒரு இரு பரிமாண வடிவத்தின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது. கருப்பு நிற சதுரம் மற்றும் வெண்மை நிற சதுரம் ஆகிய முறையேX மற்றும் Y அணுக்களை குறித்தால் இந்த அலகு கூடு அமைப்பின் அடிப்படையில் சேர்மத்தின் எளிய வாய்ப்பாடு a) XY8 b) X4Y9 c) XY2 d) XY4

6.திட நிலைமை

Список переможців

Візуальний стиль

Параметри

Обрати інший шаблон

Відновити автоматично збережене: ?